ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் , ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் காரும் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாகவும், மூவரும் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







