தென்மேற்கு சீனாவில் ஜிகோங் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய உள்ளூர் தீயணைப்புத் துறையிலிருந்து கிட்டத்தட்ட 300 அவசரகால பணியாளர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்தையடுத்து 30 பேர் தீயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகள் மூலம் கட்டுமானப் பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.








