வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தின் 80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக பாரதி விளையாட்டுக் கழகத்தால் மாபெரும் விளையாட்டு விழா நடாத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் 19.07.2024 நேற்று காலை 07.00 மணிக்கு கடல் விளையாட்டுக்கள் பாரதி விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் ஆரம்பமாகின.
ஆண் பெண்களுக்கான நீச்சல், தெப்பம் வலித்தல்,படகு ஓட்டம் போன்ற கடல் விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டது.
குறித்த விளையாட்டுக்களில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் போட்டியாளர்கள் வருகை தந்து கலந்து கொண்டதுடன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கேடயமும் பணப்பரிசும் வளங்கிகெளரவிக்கப்பட்டது.
குறித்த விளையாட்டு நிகழ்விற்கான கடல் பாதுகாப்பை வெற்றிலைக்கேணி கடற்படையினர் வளங்கியதுடன் கரையோர பாதுகாப்பில் மருதங்கேணி பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்
இந்த நிகழ்விற்கு உடுத்துறை கிராம அலுவலர் விருந்தினராக கலந்து கொண்டதுடன் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து கடல் விளையாட்டை கண்டு கழித்தனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.












