இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் மேற்கொண்டவேளை காயமடைந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரான்ஸ் தலைநகரில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார்.
ஊடகப்பணியின் போது கொல்லப்பட்ட காயமடைந்த பத்திரிகையாளர்கள் நினைவாக அவர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் முழுவதிலும் பல்வேறு துறைகளை சார்ந்த பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்கின்றனர்.
ஏஎவ்பியின் கிறிஸ்டினா அசி 2023ம் ஆண்டு ஒக்டோபர் 13ம் திகதி லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கடும் காயங்கள் காரணமாக இவரது வலதுகால் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பரிசின் புறநகர் பகுதியான வின்செனெசில் அசி சக்கரநாற்காலியில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த ஏஎவ்பியின் வீடியோ ஊடகவியலாளர் டைலன் கொலின்சும் அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.
ஏனையவர்கள் போல நடந்துகொண்டு சிறந்த உடல்நிலையுடன் ஊடகவியலாளர்களை கௌரவிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கவேண்டும் என கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் இதுவரை 108 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.








