யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அது தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, போக்குவரத்து பொலிஸார் நேற்று மாலை பண்ணை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களையும், அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.








