வவுனியா போகஸ்வெவ பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (26) காலை போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராம வயற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








