ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாளை (ஆகஸ்ட் 29) வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது தேர்தல் விஞ்ஞாபனம் புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தனது திட்டத்தையும் தொலைநோக்கையும் கோடிட்டுக் காட்டுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சி அரசியல் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டை முதலில் நினைத்தவர்கள் மட்டுமே என்னைச் சுற்றி இருக்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து முன்னேறவேண்டும்” என்று குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளில் தான் இணைந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் உணவுச் செலவைக் குறைக்கவும், தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும், வரிகளைக் குறைக்கவும் முடியும், இதுவே நாட்டின் முன்னோக்கி செல்லும் வழி என்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது எனது தேர்தல் கொள்கை. நாம் நமது பொருளாதாரத்தை நிர்வகித்து அதை வலுப்படுத்தியவுடன் வரிகளை குறைக்க முடியும். புதிய பொருளாதாரத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், புதிய வருமான வழிகளை உருவாக்குவதும் வரிகளைக் குறைக்க வழிவகுக்கும். இப்போது வரியைக் குறைத்தால் இன்னொரு நெருக்கடிக்குள் சிக்குவோம்” என்று எச்சரித்தார்.

மாவனல்லையில் நேற்று இடம்பெற்ற “புலுவன் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here