சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ரஷ்யா, ஈராக், அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றது.
குறிப்பாக 40 சதவீத மசகு எண்ணெய் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதனை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
தற்போது மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படவில்லை.
இந்த நிலையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தால், பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படும் என இந்திய பெற்றோலியத்துறை அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்துள்ளார்.








