ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலோசனைக்கமைய, ஏனையவர்களை நிராகரித்து சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து, தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைபெற்று முடிந்த 09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றியீட்டுள்ளார். அவருக்கெதிராக களத்தில் இறங்கியவர்களும் தமது தரப்பினரின் தோல்வியை ஏற்றுக்கொண்டு அநுரவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இன, மத பேரினவாதத்தில் தங்கியிருக்காமல் வெற்றியை அடைந்ததற்காக பாராட்டியுள்ளதுடன் இது அவரது பிரச்சாரத்தை வேறுபடுத்திய ஒரு முக்கிய காரணியாகும் எனவும் சுட்டிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன, மத வெறிக்கு இடமளிக்காது அபார வெற்றி பெற்றதற்கு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.






