வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று (24.09.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த பயிலுனர் பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்ததாகவும், இது தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது

முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாக்கு மூலத்தின் அடிப்படையில் பயிலுனர் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here