பாணந்துறை, பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை வடக்குப் பொலிசார் தேடுதல் நடவடிக்கைக்காக பொலிஸ் சோதனைச் சாவடியில் லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியானது நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
லொறியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த லொறியில் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.








