தெரணியகல, நூரிய கித்துல்கல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 வயது சிறுவன் தலையில் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை தனது வீட்டிற்கு அருகில் உள்ள பாறையில் தலை அடிபட்டு படுகாயமடைந்து தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது சிறுவனின் தந்தை வீட்டின் பின்புறம் உள்ள சரிவில் களைகளை அகற்றிக்கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here