ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட சுயேட்சை வேட்பாளருமாகிய கே.வி.தவராசா உள்ளிட்டவர்கள் நேற்று (16.10) மாலை யாழ்.தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் கட்சியின் வேட்பாளர்களான கருணாகரன் குணாளன், வசந்த ரூபன் மற்றும் வேலனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் கட்சி உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.










