கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவைகள் அனைத்தும் இன்றைய தினம் (18) இரத்து செய்யப்பட்டுள்ளன.
மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் தாங்கிய தொடருந்தில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
இதன் காரணமாக, தொடருந்து தடம்புரண்டதுடன் தொடருந்து பாதை பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து பாதையினைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








