தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.
இந் நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி பாண்டுர திலிப விதாரணவை நியமிப்பதற்கான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டபிள்யூ. ரவி பிரசாத் மெல், கலாநிதி நாமலி தரங்க சிறிசோம, சேர் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. ஐ. யு. பெரேரா தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.








