ராஜகிரியவில் உள்ள கராஜ் (மோட்டார்வண்டி பழுதுபார்க்குமிடம்) வளாகத்தில் பாரிய தீ பரவியுள்ளதுடன், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
“ராஜகிரியவில் உள்ள வாகன கராஜ் ஒன்றில் தீ பரவியுள்ளது, மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டன” என்று கோட்டை மாநகர சபை தெரிவித்துள்ளது.
தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. புகை மற்றும் தற்போதைய அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகள் காரணமாக அப்பகுதியை தவிர்க்குமாறு உள்ளூர்வாசிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.








