கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலவல பிரதேசத்தில் , ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 06 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை , சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








