அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) விஜயம் செய்து இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்வதற்காக சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
24 மணித்தியாலங்களும் சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு விமான தாமதங்கள் தொடர்பில் உடனடித் தகவல்களை வழங்குவதற்கும் விமான நிலைய வளாகத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவொன்றை உருவாக்குவதும் தாமதத்தின் போது பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்குவதும் அவசியம் என அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த தாமதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








