மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் 09 பேர் நேற்று வெள்ளிக்கிழமை  (29.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி சந்தேக  நபர்கள் சிலர் துப்பாக்கிகளை காண்பித்து மிரட்டி 06 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க நகைகள், மாணிக்கக் கற்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருணாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தங்க நகைகள், துப்பாக்கிகள், கத்தி மற்றும் வேன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  லக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here