கம்பளை ,கெலிஓயா பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட இந்த மாணவி அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மாணவி வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here