நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இம்முறை பாதீட்டில் இலங்கை விமானப்படைக்கான ஒதுக்கீடுகளின் அளவு மற்றும் விமானப்படையில் தற்போது காணப்படும் தேவைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here