அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதி, அதன் நீர் அமைப்புகளில் சரிவைக் கண்டு வருகிறது.

காசா தற்போது மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
“குழந்தைகள் தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்” என்று முன்பே எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த நிலையிலும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
“குடிநீர் உற்பத்தி வசதிகளில் 40 சதவீதம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன,” என்று தற்போது வந்துள்ள செய்தி மனதை பதைபதைக்கச் செய்யும் விடயமாக பார்க்கப்படுகிறது.







