Monday, July 6, 2026
No menu items!

K Dilakshan

அரசாங்க அதிபர் கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலையினை நேரில் ஆராய்வு..!

கேரதீவு சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலைகளை இன்றைய தினம் (26.10.2024) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி, புனரமைப்பு வேலைகளின் முன்னேற்றத்தினை கேட்டறிந்து கொண்டார். குறித்த பாலமானது ஆபத்தான நிலையில் காணப்பட்ட நிலையில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை...

அவிசாவளையில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு…!

அவிசாவளை - இரத்தினபுரி வீதியில் அவிசாவளை நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது. அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்..!

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறுகம்பே, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அறுகம்பேயில் உள்ள சுற்றுலாத் தலங்கள்...

மஹரகம, பழைய வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கார் மீட்பு…!

மஹரகம, பழைய வீதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு முன்பாக கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இந்த காரில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த கார் பல இடங்களில் விபத்துக்குள்ளாகியிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம வர்த்தக சங்க உறுப்பினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இந்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும்...

தமிழ் மக்களின் ஆணைக்கு எதிராக அமெரிக்கா ஒருபோதும் செயல்படாது ஜூலி சங்..!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் தரப்பிடம் கேட்டறிந்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமிழ் தரப்பினரை கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்த்...

ரயில் ஊழியர்களுக்கு இலவச ரயில் பயண அனுமதி…!

அனைத்து ரயில் ஊழியர்களுக்கும் தாம் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் பயண அனுமதி வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஊழியர்கள் தொடர்ந்து பொதுமக்களால் விமர்சிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சகம், இந்நிலையை...

நபர் ஒருவரை பலமாக தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய நடவடிக்கை…!

நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்நிலையில், குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இது தொடர்பான முறைப்பாட்டை பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர்,...

மூன்றாம் கட்ட கடன் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வரவேற்பு..!

பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை இது உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாம் கட்ட கடனை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களில் இலங்கை...

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தற்போதைய நிலவரம்…!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில், இன்று முற்பகல் 10.00 மணியளவில்  25% வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார். வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் குறித்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும்...

சுற்றுலா வலயங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்…!

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறுகம்பே, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அறுகம்பேயில் உள்ள சுற்றுலாத் தலங்கள்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img