Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்-ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில்.

மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. காலையில் சற்று...

வவுனியாவில் வாக்களிப்பு ஆரம்பம்- களத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்கள்..!

ஜனாதிபதி தேர்தல் 2024ற்கான வாக்களிப்புக்கள் இன்று நாடு முழுவதும் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவிலும் காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் இதேவேளை அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வவுனியா தேர்தல் ஆணைக்குழுவினர் சென்று பார்வையிட்டு வருவதுடன் ஐரோப்பிய ஓன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீவிர வாக்களிப்பில் ஈடுபடும் பெருந்தோட்ட மக்கள்…!  

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை செலுத்திக்கொண்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில்  6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா-மஸ்கெலியா...

முதல் சுற்றிலேயே ரணில் வெற்றிபெறுவார்!!

முதல் சுற்றிலேயே ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார் என்று இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார். ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை முதலாவது நபராக பதிவுசெய்திருந்தார். அதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச….!

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக அறநெறி பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை வாக்களித்துள்ளார்.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை நிறுத்தம்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நிறுத்தப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை மீறி மற்றுமொரு வேட்பாளருக்கு...

யாழில் வாக்களிப்புக்கள் ஆரம்பம்….!

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலானது இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 492,280 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 511 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில், வள்ளியம்மை வித்தியசாலை, முருகமூர்த்தி வித்தியாசாலை, அராலி சரஸ்வதி...

வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ…!

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சனிக்கிழமை (21.09) காலை 8.00 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியில் உள்ள வீரகெட்டிய  டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கை அளித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாமல் ராஜபக்ஷவுடன் அவரது மனைவி லிமினி ராஜபக்ஷவும்...

மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை ( 20 ) இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

கல்லடி உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில் எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை. மேலும் குறித்த பேச்சி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்த...

மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி- மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன்.

நாளை சனிக்கிழமை(21) ஆம் திகதி இடம்பெறவுள்ள 9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கு வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான சகல ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) மதியம் 2.30 மணியளவில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img