Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

7 கம்பனிகள் 1700 ரூபா சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளன; ரணில் விக்கிரமசிங்க..!

7 கம்பனிகள் 1700 ரூபா சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளதாகவும் எதிர்வரும் திங்களன்று சம்பள நிர்ணயசபை கூடி தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தேவையேற்பட்டால் தீர்மானத்தை அமுல்படுத்த சிறப்பு சட்டங்களையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் இல்லாத காரணத்தினால் யுக்திய நடவடிக்கைக்கு தடை; பொது பாதுகாப்பு அமைச்சர் கருத்து…!

பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாத காரணத்தினால் யுக்திய நடவடிக்கைக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதவியில் இருந்த சந்தர்ப்பத்தில் ‘யுக்திய’ வெற்றியடைவதற்காக தினசரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாரிகளை சரியான முறையில் வழிநடத்தியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கடந்த ஆண்டு டிசம்பர்...

எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இன்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது வடக்கு கிழக்கில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில்...

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவம் திருக்கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்..!

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவம் திருக்கொடியேற்றத்துடன் இன்று (10) வெகுமிர்சையாக ஆரம்பமானது. ஈழமணித்திருநாட்டின் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக் கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இன்று (10) காலையில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகிய கிரியை நிகழ்வுகளை தொடர்ந்துயாக பூஜை இடம்பெற்று...

இலங்கை மத்திய அரசிற்கு செய்தி தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்; சி.வி.விக்னேஸ்வரன்…!

இலங்கை மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் , இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதே இந்த ஜனாதிபதித் தேர்தலின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முழுவதுமாக தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை...

கொல்லப்பட்ட சகாக்களுக்கு ஜனாதிபதியிடம் நியாயம் கேட்பதிலிருந்து தடுக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரால் மறுப்பு.

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியை சந்திப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டு மிக நீண்ட காலமாகியும் நீதி கிடைக்காத ஏராளமான தமது சக ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தைக் கோரும் கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் அவர்கள் கையளிக்க விருந்தனர். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு ஜனாதிபதியின் பாதுகாப்பு...

தங்காலை பிரதேசத்தில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழப்பு…!

தங்காலை பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 08 ஆம் திகதி தனது கடமைகளை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது...

சூரன்.ஏ.ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்க‌தி” நூல் வெளியீட்டுவிழா..!

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மாவின் " திரைக்கு வராத சங்கதி" எனும் நூல் வெளியீட்டுவிழா 11 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்3.30 மணிக்கு தேவரையாளி இந்துக் கல்லூரியில்  சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் வரவேற்பு உரையினை  பிரான்ஸ் TNTR  சர்வதேச ஊடகவியலாளர் திருமதி ரவிச்சந்திரன் ரவிசக்தி  அறிமுக உரையினை  "ஒருவன்" செய்தித்தள முகாமையாளர் அ.நிக்ஸன் அவர்களும்,வெளியீட்டு உரையினை...

படகின் இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் – அன்னராசா கோரிக்கை!

இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரியதுங்கிய இலங்கை மீனவர்கள், இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் அவர்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடத்தில் கோரிக்கை முன்வைப்பதாக அகில இலங்கை மீனவ மக்கள்...

அம்பாறை மாவட்டத்தில் விபத்து; இருவர் படுகாயம்…!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளத்திற்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையே அமைந்துள்ள அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெல் அறுவடை முன்னாயத்த பணியில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று சடுதியாக பிரதான வீதியை நோக்கி இரு வழி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img