Monday, October 12, 2026
No menu items!

Nilu Niluja

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்தவர் கைது…!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொரளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே கைது...

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு…!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவின் ஏனைய அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு...

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நிறைவு…!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (10.10.2024) நிறைவடைகிறது. இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (08.10.2024) நிறைவடையவிருந்த நிலையில் அன்றைய தினம் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. தபால் செயற்பாடுகளில் காணப்பட்ட தாமதம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம்...

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் வாகனங்கள் மாயம்…!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 கார்கள் , 02 மோட்டார் சைக்கிள்கள் , 10 கெப் ரக வண்டிகள் , 02 ஜிப் வண்டிகள் லொறியொன்று காணாமல் போயுள்ளதாக இலங்கைத் தேசிய கணக்காய்வு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த வாகனங்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல்களை ஆராய முடியாமல்...

தேசிய மக்கள் சக்தி கட்சியில் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள அதிகமானோர் போட்டி…!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சியில் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள அதிகமானோர் போட்டியிடுவதாக அறியக் கிடைத்துள்ளது. இவ்வாறான ஒரு சூழலில், வேட்புமனுவை எதிர்ப்பார்த்து காத்திருந்தும் கிடைக்காத சிலர் மனஸ்தாபத்திற்கு உள்ளாகியுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மற்றும் அதற்கு முன்னர் அதிகளவில் கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் சிலர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகள் தொடர்பில் ஆராய தீர்மானம்…!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகள் தொடர்பில் ஆராய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மூலம் அல்லது ஏனைய அமைச்சுகள் மூலம் வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. இதேவேளை, ஒவ்வொரு பாதுகாப்பு துறைகளுக்காக வழங்கப்பட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணிக்கையும் ஆராயப்படவுள்ளது. குறித்த பாதுகாப்பு துறைகளுக்காக...

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்…!

இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86வது வயதில் காலமானார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவர் வழிநடத்திய டாடா குழுமம் அறிக்கை ஒன்றில் இதனை அறிவித்துள்ளது. இந்தியாவின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகத் தலைவர்களில் ரத்தன் டாடாவும் ஒருவர். டாடா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும், ஆண்டு வருமானம் 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாகும். டாடாவின் மரணத்தை அறிவிக்கும்...

இன்றைய நாளுக்கான வானிலை…

இலங்கைக்கு மேலாக தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி...

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 87 பேர்…!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் துரிதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்ட பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரியொருவர் அம்பலாங்கொடை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மருத்துவ முகாமொன்றில் கலந்துகொண்ட போதே ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்திருந்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 21 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதோடு, இன்னும் அடையாளம்...

கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கை…!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். கோட்டை நீதவான் இன்று புதன்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குர்ஆனையும் இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு தவறான மற்றும் பொய்யான அறிக்கைகளை...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

“ஜெயிலர் 2” படத்துடன் மோதும் டிரான்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் 'டிரோன்ஸ்' . இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம்,...
- Advertisement -spot_img