Monday, October 12, 2026
No menu items!

Nilu Niluja

கசிப்பு உற்பத்தி செய்த முன்னாள் இராணுவ சிப்பாய்…!

கண்டி, திகன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் நேற்று (08.10) கைது செய்யப்பட்டுள்ளதாக மெனிக்ஹின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெனிக்ஹின்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…!

அநுராதபுரம், ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்கந்தேவ பிரதேசத்தில் நேற்று (08.10) அதிகாலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டுள்ள மின் கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணியில்...

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை உண்ணாதீர்கள்…!

சில உணவுகளை எமக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், வெறும் வயிற்றில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு உண்பதைத் தவிர்த்தாலே சில நோய்களிலிருந்து தப்பிக்கலாம். அந்த வகையில், மருந்துகளை எப்பொழுதும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. சோடாவை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. காரணம் வெறும் வயிற்றில் இவற்றைக் குடிப்பதனால் வயிற்றில் இரத்த ஓட்டம் குறையும். இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!

உத்தியோகபூர்வ இல்லங்களை தொடர்ந்தும் வைத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து திருப்பி கையளிக்குமாறு உத்தரவிட்ட 41 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மட்டுமே திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கத்தின்...

கடல் நீரின் குளிர்ச்சியை உணர்ந்த மக்கள்….!

1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி பல பேரின் உயிரைக் காவு வாங்கியது. இச் சம்பவம் காலத்தால் அழிக்கமுடியாத துயரங்களில் ஒன்று. டைட்டானிக் கப்பல் மூழ்கிய மாலை வேளையில் கடல் நீரின் வெப்பநிலை -2 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது. இந்த குளிர்ந்த நீரில் ஒருவர் விழுந்தால் 15 நிமிடங்களுக்குள் மரணித்துவிடுவார்கள். டைட்டானிக் சம்பவத்தை நினைவு கூறும்...

சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (09.10) கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய தினம் அதிகாலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி…!

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலன்னாவை,...

ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் வர்த்தகர் கைது…!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (09.10) கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்று அதிகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான...

பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா…!

பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அர்ச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா , தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை , சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக சாவகச்சேரி வைத்தியசாலையில் வழக்கு...

எரிபொருள் விலையைக் குறைத்தால் இலாபம் பணக்காரர்களுக்கு மட்டுமே; வசந்த அத்துகோரள…!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் செயற்படுத்தப்பட்ட முதலாவது எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஒக்ரோபர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து எரிபொருள் விலை ஓரளவு குறைந்தது. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் தனது பிரச்சார மேடைகளில் வழங்கிய உறுதிகளின் படி, விலை திருத்தம் செய்யப்படவில்லை என்பது தொடர்பில் பல கருத்துக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், எரிபொருள்...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

“ஜெயிலர் 2” படத்துடன் மோதும் டிரான்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் 'டிரோன்ஸ்' . இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம்,...
- Advertisement -spot_img