Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

7 மாதங்களில் 198 காட்டு யானைகள் உயிரிழப்பு..!

கடந்த 7 மாதங்களில் 198 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு, ரயில் மற்றும் வாகன மோதல், வேட்டையாடுதல் மற்றும் இயற்கை காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவற்றில் இரண்டு யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்ததுடன்...

தரையிறங்க தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விபத்து..!!

மழை காரணமாக மும்பையில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், இதனால் விமானத்தின் இயந்திரம் மற்றும் வால் பகுதி சேதமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஓடுபாதை சேதமடைந்துள்ளது, மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று...

குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 12 பேர் விடுதலை..!

கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி மும்பையின் புறநகரில் உள்ள ஏழு ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இதில் 188 பேர் கொல்லப்பட்டதுடன்,...

முன்னாள் ஜனாதிபதிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்..!!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கூறியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தனது கடமை தவறிய குற்றச்சாட்டில் முன்னாள்...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரிப்பு..!

மலையகத்தில் கடந்த சில நாட்களாகபெய்து வரும் கடும் மழையால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் சனிக்கிழமை (19) காலை முதல் நிரம்பி வழிகின்றது. அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல்லே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, தாழ்நிலப் பகுதிகளில்...

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மானிப்பாய் தவிசாளர்!

இன்றையதினம் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது மானிப்பாய் இந்துக் கல்லூரியில், சபா நாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் திரு.ஜசீதன் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதனும் உறுப்பினர்களும் அவ்விடத்தை விட்டு வெளியேறினர். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நிகழ்வின்...

மன்னாரில் மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு..!

மன்னாரில்  வறுமைக் கோட்டிற்கு   உள்ளான பெண் தலைமைத் துவத்தை கொண்ட கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு நேற்றையதினம்(18) வெள்ளிக்கிழமை (18) வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஒழுங்கு அமைப்பில் புலம்பெயர் நாட்டில்   வசித்து வரும் ஒரு குடும்பத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு...

கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 23 ஓட்டங்களால் முன்னிலையில்..!!

முதல் நாள் ஆட்டம் நிறைவில்  கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 23ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி   அணிகள் மோதும் 14வது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்ட தொடர் நேற்று (18) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியது நாணயச்சுழற்சியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி...

தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுக்கூற வேண்டும் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!

தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்வதற்கு பிரித்தானியாவே பொறுக்கூற வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார். செம்மணி புதைகுழி விவகாரத்துக்கு துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று அடையாள போராட்டம் ஒன்று குறித்த கட்சியால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து...

யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்துப் போராட்டம்…!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம்(10)  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்னுமொரு அடக்குமுறை வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img