Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

114 வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் மரணம்..!!

உலகின் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் என்று நம்பப்படும் பிரித்தானிய-இந்தியரான ஃபௌஜா சிங், 114ஆவது வயதில் விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாபில் சிற்றூந்து ஒன்றில் மோதுண்டு அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், 100 வயதுக்கு மேற்பட்டவர் உட்பட பல வயது பிரிவுகளில் மரதன் ஓட்டங்களில் பங்கேற்று சாதனை படைத்தார். அவர் 89 வயதில் ஓடத் தொடங்கி,...

அமெரிக்க விசா தொடர்பில் வெளியான புதிய தகவல்..!!

அனைத்து வகை அமெரிக்க விசா வைத்திருப்பவர்களுக்கும், விசா விண்ணப்பதாரர்களுக்கும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்துவது அமெரிக்க சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாகும். அது விசா தொடர்பில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறது எனவும் தமது அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிரப்பட்ட செய்தியில் அந்த தூதரகம்...

வவுனியாவில் சாலையோரக் கடைகள் அகற்றம்..!!

வவுனியா மாவட்டத்தின் நகர சபை செயலாளரின் உத்தரவின்படி வைத்தியசாலை மற்றும் இலுப்பையடி பகுதிகளில்  விதிகளை மீறி அமைத்திருந்த சட்டவிரோத சாலையோர கடைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றையதினம்(16) வவுனியா கொரவபொத்தானை பள்ளிவாசலின் சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த சாலையோரக்கடைகளும் நீக்கப்பட்டுள்ளன. இதற்கான மாற்று இடங்கள் வவுனியா பிரதேச சபையால் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில்..!!

அக்கரப்பத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் பணி செய்துகொண்டிருந்த நிலையிலேயே, இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண் தொழிலாளர்கள் என, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை..!!

லண்டன், போன்ஹாம்ஸில் ( Bonhams) நடந்த இணையவழி ஏலத்தில், காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார்....

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட சில கிராமப்புறப் பாடசாலைகளில் அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். இருப்பினும், ஆசிரியர் பற்றாக்குறையை கொண்ட பிற பாடசாலைகள் உள்ளதாகவும் இந்த பற்றாக்குறை...

தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்போம் – ஹர்ஷண ராஜகருணா!!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, “எமது கட்சியில் ஏற்பட்ட பிளவுகளே தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவந்தன” என தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று(15)  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, தற்போதைய அரசாங்கத்தை...

ICC யின் சிறந்த வீரர் விருதை இழந்த இலங்கை வீரர்..!!

ஐ.சி.சி யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக தென்னாபிரிக்காவின் எய்டன் மார்க்ரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீரருக்கான பரிந்துரையில் இலங்கையின் பெத்தும் நிசங்கவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிறந்த வீராங்கனையாக மே.இ. தீவுகளின் ஹேய்லி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த விருதை பெறுவது 4ஆவது தடவையாகும்.

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு பிணை..!!

சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் பயன்படுத்தியது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்கவை இன்று (16) பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற இவ்விசாரணையின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளான ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம், மனோ...

சிறிய நாடுகளுக்கு 10% வரி!!

சிறிய நாடுகளில்  இருந்து  இறக்குமதி செய்யப்படும்  பொருட்களுக்கு 10% வரி  விதிக்க   அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்  திட்டமிட்டுள்ளார். இதன்படி கரீபியன், ஆபிரிக்க  நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

About Me

860 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை...
- Advertisement -spot_img