Tuesday, July 14, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்…!

கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 50,000 ‘பி’ தொடர் வெற்று கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பெற்றுள்ளது. மேலும் 750,000 வெற்று கடவுச்சீட்டுகளை உரிய காலத்தில் திணைக்களம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏறக்குறைய 100,000 கடவுச்சீட்டுகள் இம்மாத இறுதியிலும், 150,000 அடுத்த மாதத்திலும் பெற்றுக்கொள்ளப்படும் என குடிவரவு...

கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது…!

கேகாலை நகரத்திற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கட்டத்தின் மேல் மாடியில் உள்ள கழிவறை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து...

போதைப்பொருட்களுடன் இருவர் கைது…!

புத்தளம், நாகவில்லு பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள்  வெள்ளிக்கிழமை (01.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 08...

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்களினதும் இறுதிக்கிரியைகள் இன்று..!

பதுளை மஹியங்கணை வீதியின் அம்பகஹஒய பகுதியில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பேருந்து விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களினதும் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. இந்தநிலையில், உயிரிழந்த 2 மாணவர்களினதும் இறுதி கிரியைகள் தொடர்பான செலவுகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை  மஹியங்கணை வீதியின் அம்பகஹஒய பகுதியில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல்…

தென் பகுதியில் இருந்து வருகை தந்த சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (02.11.2024) யாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும்...

மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்…!

ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் வீட்டிற்கு கட்சி ஒன்றுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ஆதரவாளர்களில் ஒருவர் வேட்பாளர் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஒடியுள்ள சம்பவம் சனிக்கிழமை (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, ஏறாவூர் பன்சாலை...

மாத்தளை வீதியின் தலகிரியாவ பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

கலேவெல-மாத்தளை வீதியின் தலகிரியாவ பகுதியில் நேற்று (02) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெவ பொலிஸார் தெரிவித்தனர். தலகிரியாவ சந்தியில் இருந்து மாதிபொல ஊடாக கலேவெல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் குறுக்கே வந்த மாடு மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியில் கவிழ்ந்து அருகில்...

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அரச துறை அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளபடி, பாராளுமன்றத் தேர்தலுக்கு...

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு பணி ஆரம்பித்து வைப்பு…

கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை (01.11.2024) ஆரம்பித்தனர். ஏதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாளையிட்டு மட்டக்களப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கயின் ஒரு அங்கமாக வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று..!

2024 பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். நவம்பர் 14ஆம்...
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...