Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நான்கு கைதிகள் தப்பியோட்டம்; சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம்…!

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் கடந்த 1 ஆம் திகதி அன்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர். போதைப்பொருள் கடத்தல்கள், திருட்டு...

மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்;  பாடசாலை ஆசிரியர் கைது…!

11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான பாடசாலை ஆசிரியர் கடந்த 2 ஆம் திகதி அன்று  பாடசாலை வளாகத்தில் தனது பிறந்த...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு  வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பு மனு தாக்கல்…!

மட்டக்களப்பில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல் முதலில்  இன்று (07.10) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில்  8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இன்று...

தாமரை கோபுரத்திலிருந்து தவறி விழுந்து சிறுமி பலி…!

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து சர்வதேச பாடசாலை ஒன்றின் சிறுமி ஒருவர் இன்று (07.10) தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரி நியமனம்…!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்...

வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்..!

கெசல்வத்தை, டெக்னிக்கல் சந்தியில் இன்று (07.10) அதிகாலை 32 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி…!

ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் ஜப்பான் மொழி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி வீதி, ஹொரனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஜப்பான் மொழி ஆசிரியரே கைது...

குற்றவாளிகள் என தீர்ப்பளித்தவர்களை வேட்பாளர்களாக நியமிக்கவேண்டாம்; பவ்ரல்…!

நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தவர்களை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களாக நியமிக்கவேண்டாம் என தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பான  பவ்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதிமன்றத்தினால் ஊழல் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேட்பாளர்களாக நியமிப்பதை அரசியல் கட்சிகள் நியமிக்க கூடாது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்ட...

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்த பொலிஸார் இடமாற்றம்…!

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 307 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் 258 (1) மற்றும் (II) இன் படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒப்புதலின் கீழ் இந்த இடமாற்றங்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...