Friday, July 17, 2026
No menu items!

News Updates

நீர்கொழும்பு சிறை கலவரம்: உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 4 சிறை அதிகாரிகள் மற்றும் 4 கைதிகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆவர். கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று மீண்டும் அமைதியின்மை...

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் இடையே மோதல்:16 பேருக்கு காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்தனர். காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பவளப்பாறை, வனவிலங்குகளின் அங்கங்கள் தொடர்பில் இருவர் கைது

கிரிபத்கொட மற்றும் ராகம பகுதிகளில் வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் போது பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பொருட்களுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரிடமும் 32 கிலோ கிராம் பவளப்பாறை, இலங்கை  கொம்பு சிப்பி (Catadontus marianus), சிலந்தி சங்கு (Lambis lambis),புலி பல், கடல் விலங்கின் ஒரு பகுதி ஆகியன மீட்கப்பட்டுள்ளன. ஜூலை 3 ஆம் திகதி...

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (CIABOC) கைது செய்யப்பட்டிருந்த அவர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் இணைத்துக்கொண்டதில் முறைகேடுகள் மற்றும் ஊழல்...

நாட்டில் 46000 சிறுவர்கள் துஷ்பிரயோகம்;நடவடிக்கை எடுக்க கோரும் சஜித்!

நாட்டில் 46,000 குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர் எனவும் அரசு சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். குழந்தை பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார். குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில்...

வாகன இறக்குமதி கொள்கைகளை இலகுப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கை வாகனத் துறையின் சீரான செயற்பாடுகளை உறுதி செய்வதற்கும், இறக்குமதியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் இருவருக்கும் நன்மை பயக்க தேவையான கொள்கை மாற்றங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) பிரதித் தலைவர் அரோஷ ரொட்ரிகோ  கோரிக்கை விடுத்தார். நேற்று (2)ஊடகங்களைச் சந்தித்து கருத்து தெரிவித்த அவர், வாகன நிதி மற்றும்...

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், இந்த மாத இறுதியுடன் அவசரகால ஒழுங்குவிதிகளை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.    

ஜூலை 6 முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணக்கம் கண்டதையடுத்து, ஜூலை 6 ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் கெமுனு விஜேரத்ன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணமான ரூ. 30, ரூ. 34 ஆக அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டார். 100...

முன்னாள் ஜனாதிபதியின் மகன் வாகன கடத்தல்:விசாரணை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு வாகன கடத்தல் மோசடி குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமான `தினமின` பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அல்லது அவரது மகனின் பெயர் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சுங்க வரி...

சவூதி, பிரான்ஸ் விமான விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று ஏற்பட்ட இரண்டு தனித்தனி விமான விபத்துகளில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபிய அரச எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று நாட்டின் கிழக்கு கடற்கரையான ராஸ் தனுரா பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது இந்த விபத்தில் ஹெலிகொப்டரில்...
- Advertisement -

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...