Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது !

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்கள் மற்றும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்து இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில்...

இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராம அங்குரார்ப்பண நிகழ்வு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என்பதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவாகியுள்ள கண்ணகிபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கண்ணகிபுரம் பகுதியில்...

பளை மத்திய கல்லூரி பரிசளிப்பு தினம் ..!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் பரிசளிப்பு தினம் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வானது பளை மத்திய கல்லூரியின் மண்டபத்தில் (19)நேற்று காலை 9.30மணியளவில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பேராசிரியர் .சி.சிறிசற்குணராஜா(துணைவேந்தர் ,யாழ்ப்பாண பல்கலைக் கழகம் )மற்றும் திருமதி சி.சிறிசற்குணரஜா(சிரேஸ்ட விரவுரையாளர் ,மொழியல் துறை...

ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்….!

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக தேர்தலை நடத்தி மக்களின் ஐனநாயக்கத்தை உறுதிப்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (17.07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டாவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு மக்களின் ஐனநாயக உரிமைக்கு சந்தர்ப்பம் வழங்காது தேர்தலை இழுத்தடிக்காது உடனடியாக...

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகளுக்கு பாதிப்பு !

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம்  பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றுவதற்கு முந்தியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். தொடரும்...

குடிநீருக்கு சிரமப்படும் கிளிநொச்சி கல்லாறு கிராம மக்கள் !

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் 250ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பகுதியில் நீர் நிலைகளில் நீர் உவநீராக காணப்படுகின்ற நிலையில் குடிநீரை வழங்கும் பொருட்டு கரைச்சி பிரதேச சபையினால் பிரமந்தனாறு கல்லாறு குடிநீர்த்திட்டம் பிரமந்தன் பகுதியில் நீர்த்தாங்கி மூலம்...

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9091விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் பசளை மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். ஒன்பது கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு 7272.35 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு 109,085,227.50ரூபா...

கிளிநொச்சி பளைபகுதியில் 6 இலட்சத்திற்கு ஏலம் மாம்பழம்!

கிளிநொச்சி பளை கச்சார் வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ஏலம்போயுள்ளது. வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ விஞ்ஞாபனம் 13.07.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் 5ம் திருவிழாவான மாம்பழத்திருவிழா 17.07.2024 இன்று நடைபெற்றுள்ளது . வசந்தமண்டப...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு பெருவிழா இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்-முரளீதரன்  தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,மாவட்டத்தின் கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள்...

மதுபாண போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல்!

மதுபாண போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய ND-9941 இலக்க பேரூந்து மீது நேற்று (16/07/2024)மதியம் 2 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img