Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா, மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார். 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்காளிக்க தகுதிபெற்றுள்ளனர். நாளை 17.04.2025 முதல் வாக்காளர் அட்டை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும்...

கிளிநொச்சி மாவட்ட செயலக நிதி மீளாய்வுக் குழுக் கூட்டம்…!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் முதலாம் காலாண்டுக்கான நிதி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (12/04/2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்குக் கிளையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்...

வடமாகாண ரீதியிலான கராத்தே போட்டி இன்று ஆரம்பம்..! 

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ரீதியிலான கராத்தே போட்டி கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. ஐந்து மாவட்டங்களைச்சேர்ந்த ஆண் பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். திறந்த போட்டியாக குறித்த போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிசிர குமார கலந்து கொண்டு குறித்த...

முரளீதரன் தலைமையில் இடம்பெறும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் (28.03.2025) கிளிநொச்சி அரசாங்க அதிபர் எஸ்.முரளீதரன் அவர்கள் தலைமையில் காலை 9 மணி அளவில் ஆரம்பமானது. யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான  இளங்குமரன், ரஜீவன் மற்றும் பொலிஸார்,...

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈட்டுபட்ட கனரக வாகனங்கள் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் மற்றும் மண் கடத்தலில் ஈடுபட்ட கனரக வாகனங்கள் ஏ9 வீதியில் அனுமதி பத்திரம் அற்ற டிப்பர் வாகனங்கள், சட்டவிரோதமாக அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வுகள் மேற்கொண்டு டிப்பர் வாகனத்தில் ஏற்றி சட்டவிரோத அனுமதிபத்திரங்கள் தயரித்து மணல் ஏற்றி சென்றமைக்காகவும், அனுமதிப்பத்திரங்கள் இருந்து மணல் ஏற்றி வீதியில் செல்லும் போது முறையற்ற...

கடமைகளை பொறுப்பேற்ற முல்லைத்தீவு மாவட்ட புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்..!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று (3/27/2025) பொறுப்பேற்றார். இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் பொறுப்பேற்றார். ஏற்கனவே கடமையாற்றிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் சமந்த டீ சில்வா பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெ.ஏ சந்திரசேன கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா...

கிளிநொச்சியில் கட்டாக்காலி மாடுகளினால் பயணிகள் அவதி..!

கிளிநொச்சி ஏ9 வீதிகளில் பகல், இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் வீதியில் போக்குவரத்து செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபை, உட்பட்ட ஏ9 வீதி, பரந்தன் பூநகரி வீதி, மன்னார் பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் வீதி மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதி இவ்வாறு குறித்த...

சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாது அமைக்கப்பட்ட கலங்கட்டி மீட்பு! 

கிளிநொச்சி மாவட்டத்தின் பல கடற்பிரதேசங்களில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறப்படாது அமைக்கப்பட்ட கலங்கட்டி தொழிலில் சில மீனவர்கள் ஈடுபடுகின்ற நிலையில் கடற்றொழில் சங்கங்கள் வைத்த முறைப்பாட்டையடுத்து நேற்றைய தினம் கிராஞ்சி பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பெருமளவு தங்கூசி வலைகள் மற்றும் கலங்கட்டி வலைகள் அவற்றின் தடிகள் என்பன மீட்கப்பட்டன. இவற்றிற்கு எவரும் உரிமை...

161ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு..!

161ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் கிளிநொச்சியில் நினைவு கூரப்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் நேற்று காலை (@0.03.2025) நினைவுகூரப்பட்டது. குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஜெயந்த சமரக்கோன், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஓய்வு பெற்ற மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கிராமசேவையாளர்களின் சுகயீன விடுமுறை போராட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பெண் கிராம உத்தியோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவருக்கு கடந்த 2025.03.08ம் திகதியான உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை கோரியும் கிராம சேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img