Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

விளையாட்டுப் பயிற்றுநர்களுக்கான செயலமர்வு ஆரம்பம்..!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு இன்றையதினம் (2/27/2025) ஆரம்பமாகியது. இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனமும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களமும் குறித்த செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த செயலமர்வில் விளையாட்டு, மருத்துவம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் இன்றும் நாளையும் குறித்த...

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு..!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று (2/25/2025) இடம்பெற்றது. தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களின் பேண்ட் வாத்திய அணி வகுப்பு மரியாதை உடன் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அதிகாரி சிசிர பெத்த தந்ரி அவர்களினால் நடத்தப்பட்டது. தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி டி எம் சதுரங்க அவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள அணி...

பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேகநபர்..!

வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (2/24/2025) அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து  கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய...

உலகத் தமிழ் பேரவையின் 52 ஆம் ஆண்டு நிறைவு நாளை நடாத்த திட்டம்..!

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் மற்றும் செயலாளர்களது நிர்வாக கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது  ஊடக சந்திப்பு 23.02.2025 கிளிநொச்சி பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில் உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவிக்கையில், உலகத் தமிழ் பேரவையின் 52 ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு பதினான்காவது உலக தமிழ் பண்பாட்டையும் 2026...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்! 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து இன்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டு தொடர்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலய முன்றல் நோக்கி தீச்சட்டி ஏந்தியவாறு பேரணியாக போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் வடக்கு கிழக்கைச்சேர்ந்த காணாமல்...

இனந்தெரியாத நபர்களின் நாசகர செயல் –  வீட்டின் பல பகுதிகள் தீக்கிரை..!

கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம் (17.02.2025) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன. குறித்த சம்பவம்...

கமநல காப்புறுதிச் சபை மீது குற்றம் சாட்டும் கமக்காரர் அமைப்பு..!

கடந்த காலபோக நெற்ச்செய்கையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுநிருபத்தை காரணம் காட்டி இழப்பீடுகளை நியாயமாக கிடைக்காமல் செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபை என கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் குற்றம் சாட்டினார். கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் இன்றைய...

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்ற நெல் அறுவடை விழா..!

விவசாயிகள் மத்தியில் நவீன விவசாயத்தொழில்நுட்பங்களை வழங்கி விவசாய உற்பத்தி மூலம் விவசாயிகள் உச்ச பலனடையும் முகமாக விவசாய திணைக்களம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளில் ஒன்றான வயல் விழா கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று (2/14/2025) நடைபெற்றது. பரசூட் முறையில் Bg 366வெள்ளை இன நெல் நடுகை செய்யப்பட்ட வயல் அறுவடை விழா தர்மபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவின்...

தனியார் பேருந்தின் சாரதி மீது தாக்குதல் – வெளியான பகீர் தகவல்..!

கிளிநொச்சி அக்கரயான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி ஆடை தொழிற்சாலையில் இருந்து நேற்று (12.02.2025) மாலை அக்கராயன் பகுதிக்கு ஆடை தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து மதுபோதையில் வந்தவர் பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளதுடன் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அதே சமயம் கிளிநொச்சியிலிருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி அக்கரயான் பகுதிக்கு சென்ற...

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்..!

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா ( Akio ISOMATA) நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கலோரெஸ் மனிதாபிமான கண்ணியகற்றும் செயற்பாடுகளை முகமாலைப்பகுதிக்கு சென்று  பார்வையிட்டார். ஜப்பானிய நிதி பங்களிப்புடன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைவில் குறித்த பணியின் முன்னேற்றங்கள் தொடர்பில் கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img