Wednesday, June 24, 2026
No menu items!

டொனால்ட் ட்ரம்ப்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகும் அமெரிக்கா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறித்த உத்தரவினூடாக பாலஸ்தீன ஏதிலிகளுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்துவரும் ஐக்கிய நாடுகளின் முகவரகத்துக்கு தொடர்ந்தும் அமெரிக்காவினால் நிதியுதவி வழங்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரி இடைநிறுத்தம்!

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த இரு நாடுகளுக்கும் இன்று முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும்...

கொலம்பியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப் போகும் அமெரிக்கா!

நாடுகடத்தப்பட்ட ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை தரையிறக்குவதற்கு மறுத்ததையடுத்து கொலம்பியா மீதான வரிகளை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதுடன் பொருளாதாரத் தடைகளையும் விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்போது காணப்படும் 25 சதவீத வரிகள் 50...

ட்ரம்பின் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை மெக்சிகோ நிராகரிப்பு..!

ஏதிலிகளை நாடு கடத்தும் இராணுவ விமானத்தை தரையிறங்க அனுமதிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை மெக்சிகோ நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிகாரி ஒருவரையும், மெக்சிகோவின் அதிகாரி ஒருவரையும் மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அமெரிக்க இராணுவ விமானம் கடந்த வெள்ளிக்கிழமை குவாத்தமாலாவுக்கு சுமார் 80 ஏதிலிகளுடன் இரண்டு விமானங்களை அனுப்பியது. எவ்வாறாயினும்,...

லொஸ் ஏன்சலிஸ் பகுதிக்கு விஜயம் செய்த ட்ரம்ப்..!

பாரிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியாவின் லொஸ் ஏன்சலிஸ் பகுதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (1/25/2025) பயணித்துள்ளார். அங்கு அழிவுக்குள்ளாகியுள்ள பகுதிகளின் அளவை மதிப்பிடுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில் மீண்டும் காட்டுத் தீ பரவி வருகின்ற நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அங்கு பயணித்துள்ளார். லொஸ் ஏன்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீயானது 79 சதவீதம்...

உலக சுதாதார அமைப்பிலிருந்து விலகும் திகதியை அறிவித்த அமெரிக்கா!

கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக கையாண்டதாக உலக சுதாதார அமைப்பை குற்றம்சாட்டிய டொனால்ட் ட்ரம்ப், அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பில் இருந்து 2026-ம் ஆண்டு அமெரிக்கா ஜனவரி 22-ம் திகதி வெளியேறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக...

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் துருப்பினர் – ட்ரம்ப்பின் அதிரடி..!

அமெரிக்காவில் தெற்கு எல்லையில் ஆயிரத்து 500 துருப்பினரை நிலைநிறுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஆயிரம் இராணுவ சிப்பாய்களும் 500 கடற்படையினரும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிற்கும் டெக்சாஸின் எல் பாசோவிற்கும் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடைகளை மேற்கொள்வது மற்றும் பிற எல்லை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் சட்ட அமுலாக்கத்தில் ஈடுபட மாட்டார்கள் என அமெரிக்காவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இரண்டு சீ-17 மற்றும்...

டொலருக்குப் பதிலாக புதிய நாணயம் அறிமுகமா?டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தைக் கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100 வீத இந்தியா விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச...

டொனால்ட் ட்ரம்ப்பின் அமைச்சரவையின் முதலாவது உறுப்பினர் நியமனம்!

அமெரிக்காவின் அடுத்த இராஜாங்க செயலாளராக ஃபுளோரிடா செனட்டர் மார்கோ ரூபியோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அமைச்சரவைக்கு முதலாவது உறுப்பினராக மார்கோ ரூபியோ நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் செனட் வெளியுறவுக் குழுவில் பணியாற்றிய அவர், ஈரான் மற்றும் மார்கோ ரூபியோவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை...

ஆண் – பெண் பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்..!

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு பதவியேற்றுள்ளார். இதன் ஊடாக, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப் தான் பதவியேற்ற முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img