அமெரிக்காவில் தெற்கு எல்லையில் ஆயிரத்து 500 துருப்பினரை நிலைநிறுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, ஆயிரம் இராணுவ சிப்பாய்களும் 500 கடற்படையினரும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிற்கும் டெக்சாஸின் எல் பாசோவிற்கும் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தடைகளை மேற்கொள்வது மற்றும் பிற எல்லை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் சட்ட அமுலாக்கத்தில் ஈடுபட மாட்டார்கள் என அமெரிக்காவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இரண்டு சீ-17 மற்றும் இரண்டு சீ-130 விமானங்கள், உலங்குவானூர்திகளும் மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லைக்கு அனுப்பப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டினர் என குறிப்பிடப்படும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்துவதற்கு இராணுவ விமானப் போக்குவரத்து பயன்படுத்தப்படும் என அமெரிக்காவின் பதில் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here