CID யில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர!
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவு!
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு
மன்னாரில் ஆரம்பமான விடத்தல் தீவு பன்னாட்டு மாநாடு!
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த மாநாடு விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நபர்கள் ஒன்று சேரும் ஒரு அரிய சந்திப்பாக குறித்த
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டம் !
யாழ் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பௌர்ணமி தினமான இன்று(10) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறுகிறது
தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி -அமைச்சர் !!
தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மேலும் கூறுகையில், எனது தாய் மொழி தமிழ்.
பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக அஜித் பி பெரேரா!
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும்
இந்திய – இலங்கை அரசின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டம்..!
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளித்தனர். நேற்று திங்கட்கிழமை (26.05.2025) மாலை 4.45 மணி அளவில் 24 வீடுகளும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம்
அமெரிக்கா – சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு..!
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (5/20/2025) அந்தந்த தூதரங்களில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த தூதுவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன், உதயன்
அர்ச்சுனாவின் எம்.பி பதவி பறிபோகுமா? – நீதிமன்றின் உத்தரவு..!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது
தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைப்போம் – அடைக்கலநாதன் எம்.பி!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (5/8/2025) மதியம் இடம்பெற்ற