Saturday, May 30, 2026
No menu items!

ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம்!

நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்காக எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் தற்போது மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். விசேடமாக...

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மைத்திரி பங்கேற்பு!

புதிய ஜனநாயக முன்னணியின் விசேட கூட்டம் நேற்று (24) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டமானது கொழும்பு 07, ப்ளவர் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இரண்டு மணி நேர இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவர் நியமனம்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைத் தலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14/02/2025) நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது, ​​ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு முக்கிய அரசியல் பிரமுகரான திசாநாயக்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான மறைந்த காமினி திசாநாயக்கவின் மகனாவார்.

பேசுபொருளாக மாறியுள்ள ரணில் – மைத்திரிபால கலந்துரையாடல்- அடுத்த கட்ட நகர்வு என்ன?

முன்னாள் ஜனாதிபதிகளாக ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கடந்த 30ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடிமை தொடர்பில் தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, இது சாதாரணமாக நடந்த சந்திப்பொன்று எனக் கூறியதுடன், அரசியல்வாதிகள் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது சந்திப்பது இயல்பானது...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை!

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், வேறுபல கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து...

ரணில் வழங்கிய உத்தரவுக் கடிதம் தொடர்பில் CID விசாரணை..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட உத்தரவுக் கடிதம் தொடர்பில், பாதுகாப்புப் பிரிவினருக்கு விசேட உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்த தலதா அத்துகோரள..!

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையுமாறு அந்த  கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 27ஆவது பொதுச்செயலாளராக நேற்று பதவியேற்றதன் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு சென்று 50 நாட்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின்...

முன்னாள் ஜனாதிபதி நேபாளத்திற்கு விஜயம்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர்...

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்..!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். “ஜனாதிபதிகளின்...

வேட்புமனுவில் கைச்சாத்திட்ட ஜீவன் மற்றும் மருதப்பாண்டி…!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். நுவரெலியா மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img