Tuesday, May 5, 2026
No menu items!

ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உயர்வு-25 பேர் பலி..!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அண்மைய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் ஆறு குழந்தைகள் உட்பட 40 பேர் காயமடைந்தனர். கார்கிவ் மற்றும் ஒடேசா உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கான இராணுவ...

யுக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா தாக்குதல் – 11 பேர் பலி..!

யுக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுக்ரேனின் கிழக்கு நகரமான டொனெட்ஸ்க் பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன், இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எட்டு வீடுகள் மற்றும் ஒரு நிர்வாகக் கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு...

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்து..!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் எதிர்வரும் வாரங்களில் ஒப்புக் கொள்ளப்படலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். ரஷ்யப் போர் நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, போர் அடுத்த...

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் இது மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுவதால் அங்கு பதற்றம் நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய – அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையேயான இரண்டாவது சந்திப்பு..!

ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையேயான இரண்டாவது சந்திப்பை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்யத் துணை வெளியுறவு அமைச்சர் சேர்ஜி ரியாப்கோவை (Sergel Ryabkov) மேற்கோள் காட்டி அந்த நாட்டின் அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக யுக்ரைனில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் ரஷ்யா மற்றும் அமெரிக்க...

யுக்ரைன் ஜனாதிபதியை விமர்சித்த ட்ரம்ப் – எழுந்த சர்ச்சை..!

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ் 'ஒரு சர்வாதிகாரி' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பிளவை ஆழப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சவுதி அரேபியாவில் இடம்பெற்ற அமெரிக்க - ரஷ்ய பேச்சுவார்த்தைகளில் தமது தரப்பு புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்ட யுக்ரைன் ஜனாதிபதி, 'ரஷ்யாவின் தவறான தகவல்களுடன் அமெரிக்க...

யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்!

எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தின் கீழும் யுக்ரைனில் உள்ள நேட்டோ நாடுகளின் அமைதி காக்கும் படைகளை தங்களது நாடு ஏற்றுக்கொள்ளாது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) தெரிவித்துள்ளார். யுக்ரைனில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகளுக்கு இடையில் சவுதி அரேபியாவில் நேற்று இடம்பெற்ற...

ரஷ்ய – உக்ரைன்   போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – பிரான்ஸ்  ஜனாதிபதி..!

ரஷ்ய – உக்ரைன்   போரை வெகுவிரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென பிரான்ஸ்  ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஐரோப்பிய அவசரநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி  வொலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின், உக்ரைனில் நீடிக்கும்...

இரு வாரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்..!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,67,804 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மேலும், இந்த மாதத்தில் இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன்,...

ரஷ்யாவின் இராணுவ பிரதித் தலைவர் இலங்கை இராணுவத் தளபதியுடன் சந்திப்பு!

ரஷ்யாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான பிரதித் தலைவர் மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் சின்சென்கோ மற்றும் அவரது குழுவினர் நேற்று (28) இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர். இந்த சந்திப்பானது வலுவான இராணுவ உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலியுறுத்தியது. அதன்படி, நல்லெண்ண நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொள்வதோடு விஜயம் நிறைவுற்றது.
- Advertisement -spot_img

Latest News

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
- Advertisement -spot_img