மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று இரவு 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது  சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம், அரசியல் அதிகார பீடம் ஆகியன நேற்றையதினம் மாலை கொழும்பில் கூடி ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.

மேலும் ‘கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் பல இடங்களுக்குச் சென்று மக்களையும் மாவட்ட பிரதிநிதிகளையும் கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

மக்களின் கருத்துக்களும் உயர் பீடத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் நேற்றையதினம்  கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here