Thursday, April 30, 2026
No menu items!

அதிகாரி

15 குற்றவாளிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தலைமறைவு..!

கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்துள்ள 82  இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே இன்டர்போலுக்குத் தகவல் அளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிவப்பு அறிவிப்பு பெற்றவர்களை நாட்டின் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட பாதாள உலகில் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவை துபாய் காவல்துறை விரைவாகக் கொண்டுவர முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் வழக்கு முடியும் வரை அவரை நாட்டிற்கு அழைத்து வர முடியாது என்று ஒரு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இந்த வழக்கு முடிவடைய குறைந்தது 4 மாதங்கள் ஆகும் என்றும் அந்த அதிகாரி கூறினார். இலங்கையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தனது சார்பாக துபாய் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு இழப்பீடு;– ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்டது. மேலும், ஜனாதிபதி இலங்கை பாதுகாப்புப்படையானது...

இன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடத் தேர்தல் ஆணைக்குழு இன்று (27) காலை கூடுகிறது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் அதற்கான ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து இன்று கலந்துரையாடப்படும் என்று ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது. அதன்படி, ஆணைக்குழு அதிகாரிகளும் இன்று கூட உள்ளனர்.

வெளிநாட்டுக்கு வேலைக்காக பயணம் செய்பவர்களுக்கு விசேட அறிவித்தல்!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வேலை நோக்கங்களுக்காக ஓமனுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க, ராயல் ஓமன் காவல்துறையின் அறிவிப்பின் அடிப்படையில் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்ற முடியாது என்று SLBFE வலியுறுத்தியுள்ளது, மேலும் தனிநபர்கள் சுற்றுலா விசா...

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (08) நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தையில் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினரினால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கசிப்புடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமாக...

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்!

90 வகையான மருந்துகளின் விலைகளை உடனடியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து பல மருந்து நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தடைகள் உருவாகியுள்ளன.  சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒரு பிரேரணை முன்வைக்கப்படும், ஆனால் விலைக் குறைப்பு திட்டமிட்டபடி தொடரும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

யாழில் பதற்றம் – போராட்டக்காரர்களை உழவியந்திரத்தால் மோத வந்த அதிகாரி..!

யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று (17.12.2024) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது. கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும்...

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் டெங்கு உருவாகும் அபாயம்…

கிளிநொச்சி நகரை மையமாக  கொண்டுள்ள கிளிநொச்சி பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கி மாசு படிந்த நிலையில் காணப்படுவதோடு ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்கள், டெங்கு பரவக்கூடிய பொருட்கள் காணப்பட்டு வருகின்றமையால் டெங்கு பரவும் சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி பேருந்து தரிப்பிடம் தொடர்பாக மலசல கூடத்தின் கழிவுநீர் பயணிகள் பாவனையில்...

தேர்தலுக்கு தயாராகும் ரணில் அரசாங்கம்!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான பணிகளை ஆரம்பிக்கும்படி, அரச அச்சக திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அதன் அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள்...

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா…!

சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் (3,4) மூட தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்களிள்  பரவிவரும் செய்திகள் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை இன்று (3) மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், அரச அல்லது தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img