ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவுறுத்தல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்டது.
மேலும், ஜனாதிபதி இலங்கை பாதுகாப்புப்படையானது உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் நிதியினை முறையாக ஒதுக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.







