Wednesday, July 22, 2026
No menu items!

அனுர குமார திசாநாயக்க

அரசியலமைப்பு திருத்தம் இன்றி முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் குறைப்பு!

அரசியலமைப்பு திருத்தம் இன்றி, முன்னாள் ஜனாதிபதிகளின் அனைத்து வரப்பிரசாதங்களையும் குறைக்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்தது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பிலேயே அதிகளவு பேசப்பட்டது. கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் வாடகை தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பல சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களால் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு...

77 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஊடக அறிக்கையிடல் தொடர்பில் வெளியான தகவல்!

77 வது சுதந்திர தின கொண்டாட்ட வைபவம் 2025 பெப்ரவரி மாதம் 04 ம் திகதி முற்பகல்  கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கொழும்பு சுதந்திர  சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கான ஊடக அறிக்கையிடலானது அரசாங்க தகவல் திணைக்களத்தினால்  ஒருங்கிணைப்பு செய்யப்படுவதுடன், அது குறித்தான தகவல்கள் கீழ்வருமாறு  அமையப்பெறுகின்றது. இந்நிகழ்வின் ஊடக அறிக்கையிடலிற்காக...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி!

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த...

பொருளாதார உச்சி மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி!!

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டின் கீழ் பொருளாதார உச்சி மாநாடு, எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைத்தல், சிறந்த பொருளாதாரக் கொள்கைகளில் வேரூன்றிய மாற்றத்தின் வளர்ச்சி என்ற தொனிப்பொருளிலான இந்த உச்சி மாநாட்டை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, நிலையான பொருளாதார...

வளமான வாழ்க்கைக்காகவும் தேசத்தின் நன்மைக்காகவும் அரசியல் பயணம் தொடரும் – கந்தசாமி பிரபு…

தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கா மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட நன்றிகள் வழமான வாழ்க்கை தேசத்தின் நன்மைக்காகவும் மாவட்ட மக்களின் நன்மைக்காகவும் எங்கள் அரசியல் பயணம் தொடரும் என தேசிய மக்கள் சகதியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கந்தசாமி பிரபு...

அனுர ஜனாதிபதி – 15 மாதங்களுக்கு பிறகு இலங்கை ரூபாவில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விலை ரூ.300 விட குறைவடைந்துள்ளது. சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்குப் பிறகு முதல் முறையாக குறைவடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...

நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும்; அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று(29.09.2024) இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே குறித்த பெண்கள் குழு இதனை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாகப் பகிரப்பட...

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் ஜனாதிபதி….!

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அனுர குமார திசாநாயக்க தேர்வானமை நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இலங்கை மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என சிங்கப்பூர் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img