77 வது சுதந்திர தின கொண்டாட்ட வைபவம் 2025 பெப்ரவரி மாதம் 04 ம் திகதி முற்பகல்  கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கொழும்பு சுதந்திர  சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கான ஊடக அறிக்கையிடலானது அரசாங்க தகவல் திணைக்களத்தினால்  ஒருங்கிணைப்பு செய்யப்படுவதுடன், அது குறித்தான தகவல்கள் கீழ்வருமாறு  அமையப்பெறுகின்றது.

  • இந்நிகழ்வின் ஊடக அறிக்கையிடலிற்காக ஒரு தொலைக்காட்சி அலை வரிசையிலிருந்து ஒரு அறிவிப்பாளர் மற்றும் குறித்த தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து ஒரு ஒளிப்பதிவாளரையும், ஒரு பத்திரிகையிலிருந்து ஒரு செய்தியாளர் மற்றும் குறித்த  பத்திரிகை நிறுவனத்திலிருந்து புகைப்பட கலைஞர் ஒருவரையும், ஒலிபரப்பு நிறுவனம்  மற்றும் செய்தி இணையத் தளமொன்றிலிருந்து ஒரு செய்தியாளரையும் பங் குபெற செய்யமுடியும்.
  • சுதந்திரதின தேசிய கொண்டாட்டத்தினை ஊடக அறிக்கையிடலிற்காக வருகை தரும் ஆண் மற் றும் பெண் ஊடகவியலாளர்கள் பொருத்தமான ஆடை அணிந்து வருகை தரல் ஏற்புடையது.
  • அனைத்து ஊடகவியலாளர்களும் 2025.02.04 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்திற்கு வருகை தர வேண்டுமென்பதுடன் ஊடகவியலாளர்களை அழைத்து செல்லும் பஸ் வண்டி காலை 06.15 மணிக்கு சுதந்திரசதுக்கத்தை நோக்கி புறப்படும்.
  • இதில் பங்குபற்ற செய்யும் ஊடகவியலாளர்களின் பெயர்களை 2025.01.30 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு முன்னர் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரிப்படிவத்திற்கேற்ப பூர்த்தி செய்து 011-2513756 என்ற பெக்ஸ் இலக்கத் திற்கோ அல்லது publicity@dgi.gov.lk என்ற  மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்குமாறு தயவுடன் அறியத்தருகின்றோம்.
  • அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்ட ஊடக அடையாள அட்டை கொண்ட ஊடகவியலாளர்களை பங்குபற்ற செய்யவும்.
  • சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் நிகழ்வு நிறைவடைந்ததும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here