Tuesday, July 28, 2026
No menu items!

அமைச்சரவை

தேயிலை விவசாயிகளுக்கான QR குறியீடு முறைமையிலான உர மானியம் விநியோகம் விரைவில் ஆரம்பம்!

தேயிலை விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் நடவடிக்கையை மேலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில், QR குறியீடு அடிப்படையிலான புதிய முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகவும், முதல் கட்டமாக செப்டம்பர்...

NPP உறுப்பினர்கள் தங்கள் சொத்து அறிக்கைகள் அனைத்தையும் சமர்ப்பித்துள்ளனர்; நளிந்த ஜயதிஸ்ஸ!

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே , அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசியலுக்கு வருவதற்கு செல்வம் ஒரு தடையல்ல என்றும், அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதுதான்...

கீரி சம்பா பற்றாக்குறை – பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை!

சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸா தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், கீரி சம்பா பயிரிடுதல் 7% மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால் உற்பத்தி குறைந்துள்ளதெனவும், இருப்பினும் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் பற்றாக்குறை எதுவும் இல்லையெனவும் கூறினார். மேலும்,...

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப்புத்தக அச்சிடுதலுக்கு அமைச்சரவை அனுமதி!

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மொத்தம் 366 பாடப்புத்தகங்களுக்கு 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டும். இதற்காக தேசிய போட்டி விலை மனு முறைமையின்படி விலை மனுக்கள் கோரப்பட்ட நிலையில், 29 நிறுவனங்கள் மனுக்கள் சமர்ப்பித்தன. உயர்மட்ட பெருகைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 3,491.47 மில்லியன் ரூபாய் செலவில், குறித்த...

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல வரைவு நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க தயாராக உள்ளது!

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது!

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று அது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவிற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் நீதி அமைச்சில் அண்மையில் கூடியது. இதன்போது சட்டமூலத்தில் கொண்டு வரப்பட...

விவசாயிகளுக்கான உர மானியத்தில் டிஜிட்டல் முறை – அமைச்சரவை ஒப்புதல்!

விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துகின்றமையையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதனால், குறித்த பின்னூட்டல் செயற்பாட்டுக்கு வசதியளித்து விவசாயிகளுக்கு உர விநியோகத்தை மிகவும்...

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தல்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறதா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்தவகையில்  உரிமைச் சட்டம்...

இடைநிலைப் பாடசாலைகளுக்கு வழங்கவுள்ள இணைய வசதிகள்!

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (09)பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார். "1000 பாடாசலைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. 1500 பாடசாலைகளுக்கு 1900...

200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள பொதுப் பேரூந்துகளின் 52% மற்றும் அதிசொகுசு பேரூந்துகளின் 94% பொருளாதார ஆயுட்காலத்தைக் கடந்துள்ளன. எனவே, புதிய பேரூந்துகளை அறிமுகப்படுத்தும் அவசியம் மிக முக்கியமாகத் தோன்றியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பயணிகளின் அதிகரித்த கோரிக்கையை பூர்த்தி...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img