Sunday, August 9, 2026
No menu items!

ஆனந்த விஜேபால

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார். சந்தேக நபர் பயணித்த வேன்...

இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆனந்த விஜேபால முக்கிய சந்திப்பு..!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும்  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை (19/02/2025) நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்திய சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மீள நிறுவப்படும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு..!

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை மீளவும் நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிகளை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில், அந்த திணைக்களத்தின்...

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மீது மனு தாக்கல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா சமர்ப்பித்தார். அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.   <!-- -->

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு..!

அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால, அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள்...

தோல்வியடைந்த அரசியல்வாதிகள் அரசுக்கு எதிராக போலியான பிரசாரம் – ஆனந்த விஜேபால..!

தோல்வியடைந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு எதிராக போலியான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்காக நாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.எமக்கு வழங்கப்பட்ட மக்களாணையின் நோக்கத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் அதற்கேற்பவே நாம் செயற்படுவோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கல்கமுவ மக்கள் சந்திப்பில் கலந்து...

கடவுச்சீட்டு நெருக்கடி தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!

கடவுச்சீட்டு நெருக்கடி தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போதைய பாஸ்போர்ட் வழங்கும் செயல்முறையில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படலாம். தற்போது, ​​தினசரி 2,900 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன, இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க புதிய திட்டங்கள்..!

வான் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை உடனடியாகத் தடுப்பது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு தேசிய செய்தித்தாளுடனான கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். “நாங்கள் அதை நிறுத்த திட்டங்களை வகுத்துள்ளோம்.” எஸ்.டி.எஃப்...

குற்றப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மாகாண மட்டத்தில் குற்றப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த பிரிவுகள் அமைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இந்த பிரிவுகளை ஸ்தாபிக்கும் பணிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரிவுகளுக்கான அதிகாரிகளை நியமிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு தேவையான...

கழிவுகளை முறையாக நிர்வகிக்க அமைச்சரின் புதிய யோசனை..!

கழிவுகளை முறையாக நிர்வகிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் கழிவு மேலாண்மை தொடர்பாக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுமார் 100 இக்கு மேற்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார...
- Advertisement -spot_img