Tuesday, June 9, 2026
No menu items!

ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க

பொதுத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்…!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுமார் 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு ஏற்கனவே வருகைத் தந்துள்ளதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சுதந்திரமான தேர்தலுக்காக ஆசிய வலையமைப்பில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் நாட்களில் வருகைத்தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கமைய...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று….!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகம் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் இன்று (04.10) முதல் ஆரம்பமாகின்றன. எதிர்வரும் 11 ஆம் திகதி பகல் 12 மணியுடன் இந்த செயற்பாடுகள் நிறைவடையுமென்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, தேர்தல் விதிமுறைகள் குறித்து பொலிஸ் திணைக்களம் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் சின்னங்களின் மாற்றம், அரசியல்கட்சிகளின் பெயர் மாற்றங்கள், செயலாளர்கள் தொடர்பில் சிக்கல்...

பாராளுமன்றத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சைக் குழு…!

பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர். இவ்வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் முதலாவது குழு இதுவாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பிரதி ஆணையாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாகவும் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க...

ஒன்பது நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஒன்பது நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இந்த கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச கண்காணிப்பாளர்கள் இம்மாதம் 18ஆம் திகதி தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். இந்த கண்காணிப்பு குழுவில் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பு...

கட்டுப்பணம் செலுத்திய சாகர காரியவசம்!

காலி – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை நவம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என்றும், அதற்கான உசிதமான திகதி ஒன்று...

தபால் வாக்குச் சீட்டுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தல்..!

உத்தியோகபூர்வ தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பான பொதிகள் விசேட தபால் மூலம் அந்தந்த இடங்களுக்கு இன்று விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் விநியோகம் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு மொத்தம் 712,319 அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேலும்,...

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்…!

உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ஏனைய ஆணையாளர்களுடன் இணைந்து எதிர்வரும் புதன் கிழமை (28.08) கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலையும் உள்ளூராட்சி...

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரிற்கு பதிலாக புதிய வேட்பாளர்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் முஹம்மட் இல்யாஸுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முஹம்மட் இல்யாஸின் இறப்புச் சான்றிதழை ஆணைக்குழுவில் சமர்ப்பித்து புதிய வேட்பாளரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புதிய வேட்பாளரின் நியமனம் மூன்று நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img