Tuesday, April 21, 2026
No menu items!

இராமநாதன் அர்ச்சுனா

எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக கண்டனம் தெரிவிக்க நடவடிக்கை !

நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக கண்டனம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்,கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி,ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை...

கிளிநொச்சி பிரதேசசபைகளுக்குரிய கட்டுப்பணத்தை செலுத்திய அர்ச்சுனாவின் குழுவினர்..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூனகரி ஆகிய பிரதேச சபைகளுக்கு போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையிலான குழுவினர் நேற்று (18 -03-2025) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் – நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி..!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவும் நாடாளுமன்றத்தில் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் இனவெறி கருத்துக்களை வெளியிடுவதைத் தடுப்பதும் இந்த...

யாழ். மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் சட்டத்தரணி கௌசல்யா!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார். இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கமைய யாழிலுள்ள 5...

யூ-டியூப் ஊடாக பணம் சம்பாதிப்பதற்கு பிற மதங்களை விமர்சிக்கின்றார் அர்ச்சுனா – மரிக்கார் எம்.பி..!

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிறந்த  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள். எவரும் தமது  பிரபல்யத்துக்காக  பிற மதங்களை விமர்சிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு  பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார். இவ்வாறானவர்களுக்கு உரையாற்ற இடமளிக்காதீர்கள் என்று...

இஸ்லாமிய மதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கவில்லை; MP. அர்ச்சுனா!

பொதுவாக மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளையே தாம் நாடாளுமன்றில் முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கவில்லை என அர்ச்சுனா சுட்டிக்காட்டினார். இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார். சிறுபிள்ளைகளையும், பெண்களையும் மாத்திரமே தாம் கருத்திற் கொண்டு பேசியதாகக் கூறினார். எந்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் செயற்படவில்லை என...

வைத்திய துறையில் இடைநிலை ஆளணியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்; MP. அர்ச்சுனா தெரிவிப்பு!

வைத்திய துறையில் இடைநிலை ஆளணியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமெனக் கோரி யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அல்லது அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாகப் பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். வைத்தியர்கள் மாத்திரமல்ல தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேறினர். எமது நாட்டை...

உரத்த குரலில் கத்திய அர்ச்சுனா – இன்றும் சபையில் சலசலப்பு..!

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார். இன்றைய (05/03/2025) நாடாளுமன்ற அமர்வில் தனது கருத்தை முன்வைக்க நேரம் வழங்கப்படாமை குறித்து கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “ஆளும் கட்சி முன்வைத்த கருத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறி இராமநாதன் அர்ச்சுனா ஒரு...

அர்ச்சுனா எம்.பி மீது நடவடிக்கையா?

நாடாளுமன்ற சிறப்புரிமை குழு, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (2/21/2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன மீதான முறைப்பாடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறப்புரிமை குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த மூன்று பேர்...

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு – பாதுகாப்பு கோரும் அர்ச்சுனா எம்.பி..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார். கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் பலரால் தான் அச்சுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். “இந்த அமர்வுகளுக்குப் பிறகு நாங்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் விசேட தேவைக்குரியவர்களுக்கான தாழ்தள பேருந்து சேவைகள் அறிமுகம்!

விசேட தேவைக்குரியவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்தை வழங்கும் நோக்கில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (21) தாழ்தள (Low-floor) பேருந்துச் சேவை...
- Advertisement -spot_img