Saturday, July 25, 2026
No menu items!

இராமலிங்கம் சந்திரசேகர்

இந்தியாவைக் காப்பாற்றுவது எனது நோக்கமல்ல – சந்திரசேகர் தெரிவிப்பு..!

எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ, மோடியை காப்பாற்றுவதோ அல்ல என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரின் வருகை குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி...

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நன்மைகளை பெற்றுக்கொடுப்பதே இலக்கு – அமைச்சர் சந்திரசேகர்!

கடற்றொழிலாளர்களை பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, கடற்றொழிலை நவீனமயப்படுத்தி - கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும். இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் முதற்கட்டமாக நேற்று 26.03.2025 அம்பாறை மாவட்டத்துக்கு சென்றிருந்தார். மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து...

அம்பாறை ஒலுவில் துறைமுக செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை தீவிரம்!

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று (26.03.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டிருந்தார். அமைச்சருடன், அமைச்சின் செயலாளரும் உடனிருந்தார். துறைமுகத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன், பல தரப்பினருடனும் சந்திப்புகளில் ஈடுபட்டு கருத்தகளை...

மட்டு. கலங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு இன்று (3/27/2025) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது மட்டக்களப்பு கலங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மீனவ...

சிவ பூஜையில் புகுந்த கரடி அர்ச்சுனா – அமைச்சர் சந்திரசேகர் காட்டம்..!

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தனிப்பட்ட...

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி – ஆவணப்படம் அமைச்சர் சந்திரசேகரிடம் கையளிப்பு..!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம்...

சுமார் 1412 மில்லியன் ரூபா செலவில் வீதி புனரமைப்பு..! 

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்லவராஜன் கட்டு சந்தியிலிருந்து கிராஞ்சி பொன்னாவெளி வரை 12கிலோ மீற்றர் தூரமான வீதி புனரமைப்பு பணிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (3/13/2025) காலை நடைபெற்றது. குறித்த ஆரம்ப நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரி.பாஸ்கரன்,...

ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் விஜயம்..!

வடக்கு மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டது. ஆனையிறவு உப்பளத்தில் அதி நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகளை கொண்டு நிர்மானிக்கப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்ட எதிர்வரும் 26 ஆம் திகதி ஆனையிறவு உப்பு...

அரியாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் சந்திரசேகரின் கருத்து..!

யாழ். அரியாலை சிந்துப்பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேவையான  ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கம்...

தொழிலதிபர் செல்லையா பொன்னுசாமி மறைவு – அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்..!

ஊடக சேவை மூலமாகவும், வைத்தியசேவை மூலமாகவும் நாட்டுக்கும், மக்களுக்கும சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். அவரது மறைவு பெரும் கவலையை தருகின்றது என்று கடற்றொழில், நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சாமி என்றழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமியின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, தினக்குரல் பத்திரிகை, யாழ்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img